நாட்டை அச்சுறுத்தும் கொரோனா! கொழும்புக்கு வெளியே ஆபத்தில்லை, பீதியடையவேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..
கொழும்பில் 30 வீதமானவர்கள் டெல்ட்டா திரிபு வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் அடிப்படையற்றவை என கூறியிருக்கும் கொழும்பு மாநகரசபை தலமை மருத்துவ அதிகாரி ருவாண் விஜயமுனி கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், கொழும்பின் சனத்தொகையில் 30 வீதமானவர்கள் டெல்டாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என வெளியான தகவல் அடிப்படையில் தவறானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.தெமட்டகொடையின் 30 வீதமானவர்கள் டெல்டா கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்,
முழு கொழும்பு நகரமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சிலர் அச்சப்படுவது போன்று கொழும்பிற்கு வெளியே டெல்டா கொரோனா வைரஸ் பரவவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.தெமட்டகொடவிற்குள்ளேயே இந்த பரவல் காணப்படுகின்றது,
தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளையும் இந்த பகுதியை மையமாக வைத்தே முன்னெடுக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.