மீண்டும் நாட்டை முடக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதா? கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி விளக்கம்..
அடுத்துவரும் நாட்களில் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களும் உள்ள நிலையில் அதனை ஒட்டியதாக நாட்டை முடக்கும் எந்தவொரு தீர்மானமும் இல்லை. என கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஸினி பெர்னாண்டோ புள்ளே கூறியிருக்கின்றார்.
மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் தமது இயல்பு வாழ்க்கையினை கொண்டு செல்வதற்கு பழக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தாலும், பாதிப்பு இன்னும் குறைவடையவில்லை. தடுப்பூசி செலுத்தப்பட்ட பல நாடுகளில்
டெல்டா கொரோனா வைரஸ் திரிபினால் பாதிப்பேற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதன் ஊடாக உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதைபோல் அன்றி, கிரமமான முறையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெறுவதாக
இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.