விஜய் தொடர்ந்த வழக்கு!! -வரி மேல்முறையீடு அமர்வுக்கு மாற்ற உத்தரவு-

ஆசிரியர் - Editor II
விஜய் தொடர்ந்த வழக்கு!! -வரி மேல்முறையீடு அமர்வுக்கு மாற்ற உத்தரவு-

தளபதி விஜய் தாக்கல் செய்த வழக்கினை, வரி மேல்முறையீடு அமர்வுக்கு மாற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தளபதி 2012 ஆம் ஆண்டில் இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்தக் காருக்கான அனுமதிக்கப்பட்ட வரிகளை செலுத்தியிருந்தார். இருப்பினும் தமிழக அரசு விதிக்கும் நுழைவு வரியை எதிர்த்து தளபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து அண்மையில் உத்தரவிட்டார். மேலும் தளபதிக்கு ஒரு இலட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், தன்னைப் பற்றிய விமர்சனத்தை எதிர்த்தும் தளபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். 

குறித்த இன்று நீதிபதி எம்.எம்.சுரேஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வரி தொடர்பான மேல்முறையீடுகளை விசாரணை செய்யும் அமர்வுக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டார். 


Radio