வயதான தோற்றத்தில் சென்று தளபதியை கார்த்தி!!

ஆசிரியர் - Editor II
வயதான தோற்றத்தில் சென்று தளபதியை கார்த்தி!!

தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட், கார்த்தியின் சர்தார் ஆகிய 2 படங்களின் படப்பிடிப்புகளும் சென்னை பூந்தமல்லி அருகே ஒரே ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

சர்தார் படத்தில் கார்த்தி வயதான தந்தை மற்றும் மகனாக இரு வேடங்களில் நடித்து வருகின்றார். வயதானவராக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

வயதான தோற்ற மேக்கப் போட்டுக்கொண்டு கார்த்தி திடீரென்று தளபதியின் பீஸ்ட் படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்தார். அங்கு சென்ற கார்த்தியை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. சில நிமிடங்கள் தனியாக நின்று படப்பிடிப்பை பார்த்துக்கொண்டே இருந்தார். பின் தளபதிக்கு அருகில் சென்று நான்தான் கார்த்தி என்று தன்னை அறிமுகம் செய்தார். 


Radio