SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் 4 நகரங்களின் பல் பரிமாண அபிவிருத்தி விரைவில்! நோில் ஆராய்ந்தார் அங்கஜன், ஆரம்ப நிகழ்வுக்கு பிரதமர் வருகை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 4 நகரங்களின் பல் பரிமாண அபிவிருத்தி விரைவில்! நோில் ஆராய்ந்தார் அங்கஜன், ஆரம்ப நிகழ்வுக்கு பிரதமர் வருகை..

“சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தின் கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் 100 நகரங்களை பல் பரிமாண நகரங்களாக மாற்றியமைக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் வேலணை, சாவகச்சேரி, கொடிகாமம், நாவற்குழி, நெல்லியடி, மருதனார்மடம் ஆகிய 6 பிரதேசங்கள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக வேலணை, கொடிகாமம், நாவற்குழி, மருதனார்மடம் ஆகிய 4 பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான திட்ட வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டம் எதிர்வரும் 31 ஆம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ஷவால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. 

100 நகரங்களை நகரங்களை பல்பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு சுமார் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருபிரதேசத்தை பல்பரிமாண நகராக்குவதற்கு முதற்கட்டமாக 20 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் (17) 

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் களவிஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது, நகர அபிவிருத்தி சார் முன்மொழிவுகள், திட்டவரைபுகள், மற்றும் பிரதேச மக்கள், வர்த்தக பிரதிநிதிகளின் கோரிக்கைகள் என்பவற்றை கேட்டறிந்ததோடு, குறித்த விடயங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளோடு ஆலோசனைகளை நடாத்தினார். இவ்விஜயத்தின்போது, 

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் யாழ் மாவட்ட பொறியியலாளர், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பிராந்திய முகாமையாளர், இலங்கை தொலைத்தொடர்பு நிறுவன பிராந்திய முகாமையாளர், இலங்கை மின்சாரசபையின் 

யாழ்.மாவட்ட பிரதம பொறியிலாளர், பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் வர்த்தக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.