SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் பழைய இரும்பு பொறுக்குவதாக கூறி வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளை! பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பழைய இரும்பு பொறுக்குவதாக கூறி வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளை! பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்..

யாழ்.மாவட்டத்தில் பழைய இரும்பு சேகரிப்பதாக கூறிக்கொண்டு வீடுகளுக்குள் நுழையும் நபர்கள் பெறுமதியான பொருட்களை திருடி செல்வதாக முறைப்பாடுகள் கிடைக்கும் நிலையில், பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறான சம்பவம் யாழ்.நீர்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் நடைபெற்றிருக்கின்றது. குறித்த வீட்டிற்கு பழைய இரும்பு சேகரிக்கும் கும்பல் ஒன்று படி ரக வாகனத்தில் வந்த 4 பேர் வீட்டில் இருந்த மரத்திலான சிற்பவேலை செய்யப்பட்ட 

மேசையொன்றினை எடுத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீட்டில் சற்று முன்னர் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டின் விறாந்தையில் இருந்த மரத்தாலான 

சிற்ப வேலைகள் செய்த மேசையினை தூக்கிச்சென்றுள்ளனர் இதன் பெறுமதி கிட்டத்தட்ட 25 ஆயிரம் பெறுமதியானது என தெரிவிக்கப்படுகின்றது. தூக்கி ஓடுவதை அவதானித்த அயலவர் தடுக்க செல்லும் போது அவரை உதைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். 

அவர்களின் வாகன இலக்கம் NP PP 2707 இதுகுறித்து உடனடியாக பொலிஸ் அவசர தொலைபேசிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோப்பாய் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.