வடக்கு பிரதம செயலாளர் இல்லாமை நிதி மற்றும் நிர்வாக விடயங்களை செயல்படுத்துவதில் சிக்கல்..!

ஆசிரியர் - Editor I
வடக்கு பிரதம செயலாளர் இல்லாமை நிதி மற்றும் நிர்வாக விடயங்களை செயல்படுத்துவதில் சிக்கல்..!

வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஓய்வு பெற்று சென்றதை தொடர்ந்து மாகாணத்தின் நிதி, நிர்வாக விடயங்களை வினைத்திறனாக செயல்படுத்துவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

பிரதம செயலாளராக பதவி வகித்த அ.பத்திநாதன் கடந்த 4 ஆம் திகதி பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவரது பதவிக்கு புதிய செயலாளர் இதுவரை நியமிக்கப்படவில்லை.

இதன் காரணமாக வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் நிர்வாக விடயங்களை வினைத்திறனாக செயல்படுத்துவதற்கு பிரதம செயலாளர் இல்லாமையால் 

கட்டளைகளை செயற்படுத்துவது யார்? என்ற சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. வடக்கில் இடம்பெறும் அரச வேலைத்தட்டங்களை மாற்றுதல், நிதி விடயங்களை அனுமதித்தல் மற்றும் புதிய விடயங்களை புகுத்துதல் 

ஆகியவற்றிற்கு பிரதம செயலாளரின் கையொப்பம் தேவையாக உள்ள நிலையில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு