யாழ்.அரியாலை கிழக்கில் சட்டவிரோத செயற்பாடுகள் தாராளம்! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலை கிழக்கில் சட்டவிரோத செயற்பாடுகள் தாராளம்! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு..

யாழ்.அரியாலை கிழக்கு பகுதியில் இடம்பெற்றுவரும் சட்டத்திற்குமாறான செயற்பாடுகள் தொடர்பாக நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருமதி வாசுகி சுதாகரன் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார். 

நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆளுநர் செயலகத்தில் கையளிக்கப்பட்டது. குறித்த முறைப்பாட்டில் அரியாலை கிழக்கில் சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் அழிக்கப்பட்டுவருகின்றது.

அதுமட்டுமல்லாது அப்பிரதேசத்தில் வீடு கட்டுவதற்கான முன்னர் அனுமதி பெறப்பட்டு பின்னர் அட்டை வளர்ப்புக்காக கட்டட அனுமதி பெறப்பட்டுள்ளது. இருப்பினும் முன்னர் இருந்த அனுமதி மீறப்பட்டு 

குறித்த கடலட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையம் நடாத்தப்பட்டு வருகிறது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரை முகாமையாளராக கொண்டே 

குறித்த கடலட்டை இனப்பெருக்க நிலையம் அரியாலை கிழக்கில் செயற்பாட்டு வருகின்றது.குறித்த கடலட்டை இனப்பெருக்கம் இடம் பெற்று வரும் கட்டடத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி அதற்கான வருமான வரி என்பன 

செலுத்தப்படாமல் இருப்பதன் காரணமாக பிரதேச சபைக்கு வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது.ஆகவே குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு வட மாகாண ஆளுநருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் 

உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறஞ்சனின் கவனத்துக்கும் பிரதேச சபை உறுப்பினரால் முறைப்பாடு கையளிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு