SuperTopAds

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு

ஆசிரியர் - Admin
ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு, விமானப்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்காக, இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் பிரியர்ந்த பெர்ணான்டோ தலைமையிலான குழுவினர் ஒரு தொகுதி உலர் உணவுப்பொருட்களை விமானப்படையினரிடம் கையளித்துள்ளனர்.

குறிப்பாக இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் பிரியந்த பெர்ணான்டோ தலைமையில், இலங்கை ஆசிரியர் சங்க வட மத்திய மாகாண இணைப்பாளர் ஜே.எம்.இலியாஸ், இலங்கை ஆசிரயர் சங்க வவுனியா மாவட்ட தலைவர் பாஸ்கரமூர்த்தி நேசராஜா உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு முல்லைத்தீவு - கேப்பாப்புலவு விமானைப்படைத் தளத்தில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்துக்கு ( 15 ) இன்று வருகை தந்து, ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினருக்கான உலர் உணவுப்பொருட்களை விமானப் படையினரிடம் கையளித்திருந்தனர்.

அதேவேளை இவ்வாறு வருகை தந்தவர்களை விமானப்படையினர் விமானப்படைத் தளத்திற்குள் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களைப் பார்வையிட அனுமதித்திருக்கவில்லை.

அத்தோடு வருகை தந்த ஆசிரியர் சங்கத் தலைவர் தலைமையிலான குழுவினருடன் விமானப்படைத் தளத்திற்கு வெளிப் பகுதியிலே விமானப்படையினர் மற்றும், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தனிமைப்படுத்தலில் உள்ள இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்குரிய உலர் உணவுப் பொருட்களை விமானப் படையினர் பரிசோதித்து பெற்றுக்கொண்டனர்.

அத்துடன் உணவுப்பொருட்களை வழங்கிய ஆசிரியர் சங்கத் தலைவர் தலைமையிலான குழுவினரின் விபரங்களும் விமானப்படையினரால் பெற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் குடும்பத்தவர்களால், அவர்களின் வீட்டில் செய்யப்பட்ட சமைத்த உணவுகளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஏற்க மறுத்ததுடன், சுகாதார வழிமுறைகளுக்கு உட்பட்ட உணவுகளை மாத்திரமே வழங்க அனுமதிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.