ஏழு நாடுகளின் தூதுவர்களுடன் பஷில் சந்திப்பு!
நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும், ஏழு நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று இடம்பெற்றது.
அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஸ்யா, பிரித்தானியா, ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இராஜதந்திரிகள் இச்சந்திப்பில் கலந்துக் கொண்டார்கள்.
பிளவுப்படாத வெளிவிவகார கொள்கையினை முன்னெடுத்து செல்லல், உலகில் அனைத்து நாடுகளுடன் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்புடன் செயற்படுவது அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பு என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தினார்.
இச்சந்திப்பு குறித்து இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் ஹொல்கர் சியுபேர்ட் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும், வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையில் வினைத்திறனான சந்திப்பு இடம் பெற்றது.
இலங்கையின் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஜேர்மனி எந்நிலையிலும் ஒத்துழைப்பு வழங்கும் என தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.