யாழ்.பருத்தித்துறை சிவன் கோவில் திருவிழாவில் கொரோனா தொற்றாளர்களும் பங்கேற்பு! தீவிரமாகும் பதற்றம், தீர்த்த திருவிழாவுக்கு தடை..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை சிவன் கோவில் திருவிழாவில் கொரோனா தொற்றாளர்களும் பங்கேற்பு! தீவிரமாகும் பதற்றம், தீர்த்த திருவிழாவுக்கு தடை..

யாழ்.பருத்தித்துறை நகரில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் குறித்த பகுதியில் உள்ள சிவன் கோவில் தேர் திருவிழாவில் கொரோனா தொற்றாளர்களும் கலந்து கொண்டமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன. 

இந்நிலையில் ஆலயத்தின் தீர்த்த திருவிழாவுக்கு தடை விதித்த சுகாதார பிரிவினர் திருவிழாவில் கலந்து கொண்டவர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. இது தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

ஆலய திருவிழாக்களை 150 பேருடன் நடத்தலாம் என்று திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளிவந்ததை அடுத்து தேர்த்திருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் நேற்றையதினம் நடைபெற்றிருந்தது. இதற்கிடையில் பருத்தித்துறை 1ம், 2ம், 3ம் குறுக்குத்

தெருக்களில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகி இருந்தது. இதன்போது குறித்த பகுதியில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

மேற்படி தொற்றாளர்கள் சிலர் சிவன் கோவில் தேர் திருவிழாவில் பங்கேற்றிருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதையடுத்தே, சிவன் கோவில் தீர்த்த திருவிழாவுக்கு சுகாதார பிரிவினர் தடைவிதித்ததுடன், 

இதனால் இன்று தீர்த்த திருவிழாவானது ஆலய பூசகர்கள், நிர்வாகத்தினர் மட்டும் பங்கேற்கும் வகையில் ஆலயத்திற்குள்ளாகவே நடத்துவதற்கு சுகாதரப் பிரிவினரால் நடவடிக்க முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. 

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்கள் பங்கேற்ற தேர் திருவிழாவில் நூற்றிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு