12வயது, 16 வயதான இரு பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று!
முல்லைத்தீவு - மல்லாவி பகுதியில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
யாழ்.போதனா வைத்திய சாலை ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட இரு குடுபங்களைச் சேர்ந்த 07 பேரின் மாதிரிகள் நேற்றைய தினம் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன்போதே ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு 49 வயதுடைய தந்தை, 45 வயதுடைய தாய்
மற்றும் 12, 16 வயதுடைய பிள்ளைகள் இருவர் என நால்வருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.