விடுதலை புலிகளை ஊக்குவித்த குற்றச்சாட்டில் வெளிநாட்டிலிருந்து வந்த நபர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் கைது!
கட்டார் நாட்டிலிருந்து இலங்கை வந்த நிலையில் முள்ளியவளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
41 வயதான குறித்த நபர் தமிழீழ விடுதலை புலிகளை ஊக்குவித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
பாக்கியதுரை நகுலேசன் என்பவரே சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் 2019 ம் ஆண்டு கட்டாருக்கு சென்றவர் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நபர் விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர்
அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் ஊடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
.