3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று! யாழ்.மாவட்ட மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பட்டனர், வெளிமாவட்ட மாணவர்கள் விடுதியில்..

ஆசிரியர் - Editor I
3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று! யாழ்.மாவட்ட மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பட்டனர், வெளிமாவட்ட மாணவர்கள் விடுதியில்..

யாழ்.பல்கலைகழகத்தின் கோண்டாவில் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 3 மாணவர்களுக்குக் கொரோனாத்தொற்று உறுதி செய்யப்பட்டதால் விடுதியிலுள்ள யாழ்.மாவட்ட மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கோண்டாவில் விடுதியில் 200 வரையிலான மாணவர்கள் தங்கியிருந்த நிலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உ று தி செய் ய ப் ப ட் டதோடு மேலும் சிலருக்கு மீள் தொற்றுப் ப ரிசோதனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் கொரோனாத் தொற்றுறுதி செய்யப்பட்ட மாணவர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர்கள் மட்டும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதேநேரம் இந்த விடுதியில் இருந்த 

யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் உடனடியாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்தும் விடுதியிலேயே தங்கியுள்ளனர்.

இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டவர்களினால் கொரோனா பரவல் ஏற்படலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. அதேசமயம் தொடர்ந்தும் விரிவுரை கள் இடம்பெறும் எனவும், விரிவுரைகளுக்கு 

இன்று முதல் சமுகமளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு