யாழ்.காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்படை அதிரடி! 103 மில்லியன் பெறுமதியான கஞ்சா மீட்பு!குருநகர், நாச்சிக்குடா, மன்னார் பகுதிகளை சேர்ந்த 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்படை அதிரடி! 103 மில்லியன் பெறுமதியான கஞ்சா மீட்பு!குருநகர், நாச்சிக்குடா, மன்னார் பகுதிகளை சேர்ந்த 3 பேர் கைது..

யாழ்.காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்படையினர் நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின்போது சுமார் 103 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டிருக்கின்றது. 

கடற்படையினர் இன்று மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின்போதே சுமார் 344 கிலோ மற்றும் 550 கிராம் எடையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதன்போது மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 

கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்திய டிங்கி படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் கைதானவர்கள் நாச்சிகுடா, மன்னார் மற்றும் குருநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இந் நிலையில் கைதான நபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் கேரள கஞ்சா தொகை என்பன காங்கேசந்துரை பொலிஸாரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றியே கடற்படையின் இந்த சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடல் வழியாக மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் இவ்வாறான ரோந்துப பணிகளை 

முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு