யாழ்.சாவகச்சோி நகரில் இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிளில் நடமாடியவர்கள் யார்? அச்சத்தில் உறைந்த மக்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி நகரில் இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிளில் நடமாடியவர்கள் யார்? அச்சத்தில் உறைந்த மக்கள்..

யாழ்.சாவகச்சேரி நகரப் பகுதி வீதி யொன்றில் இலக்கத்தகடுகள் இல்லாத இரு மோட்டார் சைக் கிள்களில் நால்வர் நின்றதால் வீதியைப் பயன்படுத்தும் மக்கள் அச்சத்துடன் பயணித்தனர் என்றும், 

இரவுப்பொழுதை அச்சத்துடன் கழித்தனர் என்றும் தெரி விக்கப்பட்டது. சாவகச்சேரி நகரப் பகுதியில், டச்சு வீதியையும் அஞ்சலக வீதியையும் இணைக்கும் கண்டுவில் மேற்கு வீதியில் கடந்த வியா முக்கிழமை பிற்பகல் வேளையில் 

இரு இடங்களில் இலக்கத்தகடுகள் இல்லாத இரு மோட்டார் சைக்கிள்கள் நின்றதை அவதா னித்த மக்கள் அவ்வீதியில் செல்ல வேண்டாமென ஏனைய மக்களைத் தடுத்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை தென்மராட்சி

கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரிபணியகத்தில் கொவிட்- 19 தடுப் பூசி ஏற்றப்பட்டது. கல்வி வலயத் தால் அறிவிக்கப்பட்ட பிரகாரம் நகரப்பகுதி 

மற்றும் நகரை அண்டிய பாடசாலைகளுக்கு பிற்பகல் தடுப்பூசி ஏற்றுவதற்கு ஏற்பாடு கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. சுகாதார மருத்துவ அதிகாரி பணியகத்திற்குச் செல்வதற்கு குறுகிய பாதை என்பதால் 

தங்க நகை அணிந்து வரும் ஆசிரியைகளைக் குறி வைத்து திருடர்கள் அவ்விடத்தில் நின்றிருக்கலாமெனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வீதியில் உள்ள வயல்வெளிகளை அண்டிய பகுதியில் காணப்படும் மரங்களின், 

குழைகள் மறைப்பதால் திருடர்கள் மறைந்திருந்து திருட்டில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன எனவும் பற்றையாகக் காணப்படும் மரக்கிளைகளை அப்புறப்படுத்து மாறும் மக்கள் நகரசபையைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு