யாழ்.பருத்தித்துறை 2ம் குறுக்கு தெரு பகுதி நாளை காலை 6 மணி தொடக்கம் முடக்கப்படுகிறது..! அறிவிப்பு வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை 2ம் குறுக்கு தெரு பகுதி நாளை காலை 6 மணி தொடக்கம் முடக்கப்படுகிறது..! அறிவிப்பு வெளியானது..

யாழ்.பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெருவில் நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து. 

53 குடும்பங்களை உள்ளடக்கிய 2ம் குறுக்குத் தெரு பகுதியை நாளை காலை 6 மணி தொடக்கம் முடக்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த வீதியில் உள்ள 60 பேர் எழுமாறாக பரிசோதனை செய்யப்பட்டு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து சுகாதார பிரிவினரால் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியிடம் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைவாக, 

பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெரு பகுதியை நாளை காலை 6 மணி தொடக்கம் முடக்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு