SuperTopAds

யாழ்.பருத்தித்துறையில் எழுமாறாக 60 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் எழுமாறாக 60 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெருவில் எழுமாற்றாக தேர்வு செய்யப்பட்ட 60 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் பணிப்பின் பெயரில் இன்று சனிக்கிழமை 2ம் குறுக்குத் தெருவில் எழுமாறாக தொிவு செய்யப்பட்ட 60 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கின்றது. 

இதன்போது 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு கூறியுள்ளது.