யாழ்.வலி,கிழக்கு பிரதேசசபை தவிசாளரை யாழ்.மாநகரில் வழிமறித்து அச்சுறுத்தல், தாக்கவும் முயற்சி..

யாழ்.வலி,கிழக்கு பிரதேசசபை தவிசாளரை யாழ்.நகரில் வழிமறித்த சிலர் தம்மை அரசாங்கத்தின் ஆட்கள் என அடையாளப்படுத்தி கூறியதாகவும், தாக்குதல் நடாத்த முயற்சித்ததாகவும் தவிசாளர் தி.நிரோஸ் கூறியுள்ளார்.
இது குறித்து தவிசாளர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்து தவிசாளர் கூறியுள்ளதாவது, யாழ்.நகரில் நான் பயணித்துக் கொண்டிருந்த நிலையில்,
மத்திய மாகாண பதிவில் உள்ள பிக்கப் (CP PP – 0595) வாகனத்தில் அருகாக சென்ற சிலர் தவிசாளரை எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் பிரதான வீதியில் உள்ள நெடுந்துார பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் சென்ற நிலையில் தவிசாளர் பிரச்சினை என்ன என வினவியுள்ளார்.
இதனையடுத்து துாஷண வார்த்தைகளால் திட்டியவாறு கல் ஒன்றை எடுத்துக் கொண்டு தவிசாளர் மீத தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.
எனினும் அப்பகுதியில் உனடியாக பொதுமக்கள் கூடிய நிலையில் அங்கிருந்து தப்பி சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில்
தவிசாளர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.