சிங்கள இளைஞர், யுவதிகளுக்கே அதிகளவு வேலைவாய்ப்புக்கள்....
சிங்கள இளைஞர், யுவதிகளுக்கே மத்திய அரசாங்கம் அதிகளவு வேலைவாய்ப்புக்களை வழங்கி வருகின்றது என்பது உண்மை. ஆனால் தமிழ் இளைஞர், யுவதிகளும் எங்கள் மண்ணில் படித்து விட்டு எங்கள் மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய விரும்புவதில்லை.
குறிப்பாக வடமாகாணத்தில் தாதியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதனால் வெளிமாவட் டங்களில் இருந்து தாதியர்களை இங்கே கொண்டுவரவேண்டிய தேவை எழுந்துள்ளது. தாதிய உத்தியோகத்தர்களுக்கு எமது இளைஞர் யுவதிகள் விண்ணப்பிப்பதில்லை.
மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில்லை, காவலாளி வேலையும் கூட சிங்கள இளைஞர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
ஏன நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டியிருந்தனர். இது தொடர்பாக கேட்டபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்hளர். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
மத்திய அரசாங்கத்தின் அமைச்சுக்கள் தமக்கு கீழ்பட்ட திணைக்களங்களுக்கு ஊழியர்களை சேர்க்கும்போது பெரும்பாலும் சிங்கள இளைஞர்,
யுவதிகளையே சேர்த்து கொள்கிறார்கள். இதனை நாங்கள் கண்டித்துள்ளோம். இது தொடர்பா க அமைச்சர்களுடன் பேசியபோது அவர்கள் உள்ர் தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வேலவாய்ப்பை கொடுங்கள் என கேட்டோம்.
அப்போது ஆமாம் போட்டவர்கள் மீண்டும் சிங்கள இளைஞர், யுவதிகளுக்கே வேலைவாய்ப்பை கொடுக்கிறார்கள். அதற்காகவே நாங்கள் அரசயல் தீர்வு ஒன்றை விரைவாக கேட்கிறோம்.
இந்த விடயத்தில் நாங்கள் வாக்குவாதப்பட்டாலும் அவர்கள் செய்வதை தொடர்ந்து செய்வார்கள். தடுப்பதற்கான உரித்து எங்களிடம் இல்லை. அதேசமயம் எங்களுடைய தமிழ் இளைஞர், யுவதிகளும் வடமாகாணத்தில் படித்துவிட்டு கொழும்பில் வேலை பார்ப்பதற்கும், வெளிநாடு செல்வதற்கும் விரும்புகிறார்கள்.
இவ்வாறு பலர் சென்றிருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் பல தொழில்துறைகளுக்கு ஆட்கள் இல்லை. குறி ப்பாக தமிழ் இளைஞர், யுவதிகள் தாதிய உத்தியோகத்திற்கு இல்லை. இதனால் வேறு இடங் களில் இருந்து ஆட்களை கொண்டுவரவேண்டியுள்ளது.
ஆகவே எங்களுடையவர் வெளிநாடு களுக்கும், கொழும்புக்கும் சென்று கொண்டிருந்தால் வடகிழக்கு மாகாணங்களை யார் பார்ப்பது. எனவே அதனையும் நாங்கள் மறக்ககூடாது என்றார்.