த.தே.கூட்டமைப்பு நிபந்தனை விதித்திருந்தால் நல்லது...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டபோது பிரதமருக்கு ஆதரவளிக்க முன்னர் பிரதமருக்கு எழுத்துமூலம் நிபந்தனைகளை கொடுங்கள் என நான் கேட்டிருக்கின்றேன்.
அவ்வாறான நிபந்தனைகளை கொடுத்திருக்கிறார்களா? கொடுத்திருந்தால் பிரதமர் அதனை அங்கீகரித்துள்ளாரா? என நான் அறியவில்லை. ஆனால் கொடுத்திருந்தால் அதனை பிரதமர் அங்கீகரித்திருந்தால் அது சிறந்த ஒரு விடயமாகும்.
மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். பிரதமருக்கு எதிரா ன நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வழக்களிக்க தமிழ்தேசிய கூட்டமைப்பு 10 நிபந்தனகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பியபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் முதலமைச்சர் கூறுகையில்,
தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டபோது பிரதமருக்கு ஆதரவளிப்பதற்கு சில நிபந்தனைகளை எழுத்தில் கொடுக்கவேண்டும்.
பிரதமருக்கு ஆதரவளிப்பதற்கு முன்னர் எழுத்துமூலமாக சில நிபந்தனைகளை தமிழ்தே சிய கூட்டமைப்பு கொடுக்கவேண்டும் என நான் கேட்டிருந்தேன். அவ்வாறான நிபந்தனைகளை எழுத்துமூலமாக கொடுத்தார்களா?
பிரதமர் அந்த நிபந்தனைகளுக்கு இணங்கினாரா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவ்வாறான நிபந்தனைகளை கொடுத்திருந்தால், அதனை பிரதமர் அங்கீகரித்து அவற்றை நடைமுறைப்படுத்தினால் சிறப்பான விடயமாகும்.
ஆனால் அரசியலில் எல்லாம் சாத்தியம் என சொல்வார்கள். எனபே என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். தமிழ்தேசிய கூட்டமைப்பு நிபந்தனைகளை வழங்கி அதனை பிரதமர் அங்கீகரித்தால் அதனை நடைமுறைப்படுத்துவார் என நான் நம்புகிறேன்.
ஆனாலும் முன்னர் கூறியதைபோல் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். என முதலமைச்சர் மேலும் கூறியிரு க்கின்றார்.