மீள்குடியேற வேண்டிய மக்களுக்கு யாழ்.மாவட்ட செயலர் விடுத்துள்ள அறிவித்தல்!

யாழ்.மாவட்டத்தில் போர் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள குடியமர்த்துவதற்காக விபரங்களை சேகரிக்கும் பணி பிரதேச செயலகங்களால் முன்னெடுக்கப்படுவதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) சு.முரளிதரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தொிவிக்கப்பட்டிருப்பதாவது, யாழ்.மாவட்டத்தில் போரினால் இடம்பெயர்ந்து தற்போதும் வேறு இடங்களில் வசித்து வரும் குடும்பங்களின் விவரங்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன.
பல்வேறு பிரதேசங்கள் மீள்குடிமர்த்துவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மீள்குடியமராத குடும்பங்களின் விவரங்கள் அவர்கள் தற்போது வசிக்கும் பிரதேச செயலகங்களினால் இற்றைப்படுத்தப்பட்டு வருகின்றன.எனவே இடம்பெயர்ந்து இதுவரை மீள்குடியமராத மக்கள்
தங்கள் தற்போது வசிக்கும் பிரதேச செயலகத்துடன் தங்களுடைய பெயர் குறிக்கப்பட்ட பட்டியல் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு யாழ்.மாவட்டச் செயலாளர் க.மகேசன் கேட்டுள்ளார்.