யாழ்.அல்லைப்பிட்டி - ஊர்காவற்றுறை வீதியில் இராணுவம் அதிரடி! 6 கிலோ 500 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் சிக்கினார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.அல்லைப்பிட்டி - ஊர்காவற்றுறை வீதியில் இராணுவம் அதிரடி! 6 கிலோ 500 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் சிக்கினார்..

யாழ்.அல்லைப்பிட்டியில் ஆட்டோவில் கடத்தப்பட்ட சுமார் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கடத்தி சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஊர்காவற்றுறை - அல்லைப்பிட்டியில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் 

அவரிடமிருந்து 3 பொதிகளில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் முச்சக்கர வண்டியும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு