உரம் வாங்குவதற்காக கமநலசேவை நிலையத்திற்கு சென்றவர்களை பூட்டிவைத்து பீ.சி.ஆர் பரிசோதனை! முடிவு வெளியாகும்வரை தனிமைப்படுத்தல்..
ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையத்தில் உரம் பெறுவதற்காக கூடிய 75 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், முடிவுகள் வெளியாகும்வரை தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
தற்போது நாட்டில் கொவிட் 19 காரணமாக மக்கள் ஒன்று கூடும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றுக்கு பொலிஸார் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின்
ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தில் உரத்தினை பெற்றுக்கொள்வதற்காக நேற்று நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒன்று கூடியுள்ளார்கள்.இந்நிலையில் குறித்த பகுதிக்கு விரைந்த பொதுசுகாதார பரிசோதகர்கள்
உள் இருந்தவர்களை வைத்து கேற்றினை சாத்தியுள்ளார்கள். இதன்போது அதிலிருந்து ஒருசிலர் தப்பி வெளியில் சென்றுள்ளார்கள்.அங்கு கூடியிருந்த 75 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்
அதன் முடிவுகள் வரும்வரை வீட்டினை விட்டு வெளியேறாதாவாறு தனிமைப்படுத்தல் அறிவித்தலை பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ளார்கள்.