யாழ்.நெல்லியடி மருந்தகத்தில் திருடிய நபர் குறித்து பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்! குளிர்பானம் அருந்தும் ஆசையில் முக மறைப்பை நீக்கினார்..
யாழ்.நெல்லியடியில் மருந்தகத்திற்குள் புகுந்து திருடிய திருடன் குளிர்பானத்திற்கு ஆசைப்பட்டு முக மறைப்பை நீக்கிய நிலையில் திருடனின் முகம் CCTV கமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் திருடணை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடியிருக்கின்றனர். நெல்லியடி நகரில் இலங்கை வங்கிக்கு அருகில் உள்ள மருந்தகம்,
கடந்த 4ம் திகதி உடைக்கப்பட்டு அங்கிருந்து மருந்து மற்றும் பணம் திருடிச் செல்லப்பட்டிருக்கின்றது. இதன்போது திருடன் மருந்தகத்திற்குள் இருந்து குளிர்பானத்தை எடுத்து பருகியுள்ளான்.
குளிர்பானம் பருகும் அவசரத்தில் CCTV கமரா இருப்பதை மறந்து முக மறைப்பை நீக்கி தனது முகத்தை காண்பித்துள்ளார். அந்த காட்சி பதிவாகியுள்ள நிலையில் குறித்த நபரை அடையாளம் காண உதவுமாறு
நெல்லியடி பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதுடன், தகவல் அறிந்தவர்கள் 0212263222 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும் என பொலிஸார் கூறியுள்ளனர்.