கர்ப்பவதியான தாதியை கொரோனா சிகிச்சை நிலையத்தில் கடமைக்கு அமர்த்திய சாவகச்சோி வைத்தியசாலை நிர்வாகம்! தாதியர் சங்கம் தலையீடு..

ஆசிரியர் - Editor I
கர்ப்பவதியான தாதியை கொரோனா சிகிச்சை நிலையத்தில் கடமைக்கு அமர்த்திய சாவகச்சோி வைத்தியசாலை நிர்வாகம்! தாதியர் சங்கம் தலையீடு..

கர்ப்பவதியான தாதியை கொரோனா சிகிச்சை நிலையத்தில் கடமைக்கு அமர்த்தியமை தொடர்பான விடயத்தில் வடமாகாண தாதியர் சங்கம் தலையீடு செய்துள்ளதுடன், வைத்தியசாலை நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் கர்ப்பவதியான குறித்த தாதியை கொரோனா விடுதியில் கடமை ஆற்றுவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் பணித்தமையால் பிரச்சனை எழுந்தது.

இந்த பிரச்சினை மட்டுமல்லாது குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்ற மேலதிக நேரக் கொடுப்பனவிலும் பாரபட்சம் காட்டியமை, தாதிய உத்தியோகத்தர் ஒருவரை பதில் கடமைக்காக அடிக்கடி விடுதிகளுக்கு இடமாற்றியமை, 

தாதிய பரிபாலகர் அலுவலகம் தொடர்ச்சியாக இயங்காமை, இடமாற்றங்களை வழங்கும்போது பொதுவான கொள்கை இல்லாமை போன்ற குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி வடக்கு மாகாண தாதியர் சங்கம் 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு