யாழ்.மாவட்டத்தில் புயல் நிவாரணம் 1 கோடியே 30 லட்சத்தை காணவில்லை! கொடுத்தோம் என்கிறது செஞ்சிலுவை சங்கம், தொியாது என்கிறது அனர்த்த முகாமைத்துவ பிரிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் புயல் நிவாரணம் 1 கோடியே 30 லட்சத்தை காணவில்லை! கொடுத்தோம் என்கிறது செஞ்சிலுவை சங்கம், தொியாது என்கிறது அனர்த்த முகாமைத்துவ பிரிவு..

யாழ் மாவட்டத்தில் நிவர் மற்றும் புரவி அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினால் வழங்கப்பட்ட 1 கோடி 30 லட்சம் ரூபா நிவாரணத்திற்கு தம்மிடம் விவரம் இல்லை. என மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கூறியுள்ளது.

நிவர் மற்றும் புரவி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்.கிளையினரால் யாழ்.மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்ட பெயர்களின் அடிப்படையில் 1கோடிக்கு அதிகமான நிதி செலவழிக்கப்பட்டதாக 

யாழ்.செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இக் கருத்தினை அடிப்படையாக வைத்து யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு செஞ்சிலுவைச் சங்கக் கிளையினால் செலவு செய்யப்பட்ட 

பாரிய நிதி தொகைக்காக வழங்கப்பட்ட பயனாளிகளின் பெயர் விபரங்களை தருமாறு தகவல் அறியும் சட்டம் மூலத்தால் கோரிக்கை விடப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு 

மேற்படி கோரிக்கையாளரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த நிவாரணம் வழங்கியமை மற்றும் வழங்கிய தொகை தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட பெயர் பட்டியல் விபரம் அடங்கிய தகவல்கள்

தமது பிரிவில் இல்லையென எழுத்துமூலம் பதில் வழங்கியுள்ளது. அரச சார்பற்ற நிறுவனமான குறித்த நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தாம் வழங்கிய உதவிக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவே 

யனாளிகள் பட்டியலை அனுப்பியதாக கூறியிருக்கின்றது. எனினும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தம்மிடம் இல்லை என மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு பதில் வழங்கியிருக்கும் நிலையில்,

பாதிக்கப்பட்ட கரையோர மக்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 1 கோடியே 30 லட்சம் வழங்கியதாக செஞ்சிலுவை சங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. உண்மை என்ன தொடர்ந்தும் ஆராய்வோம். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு