யாழ்ப்பாணத்தில் சூடு பிடித்திருக்கும் வீட்டுத்திட்ட அரசியல் வியாபாரம்! பயனாளிகள் தொிவே முழுமை பெறவில்லை ஆனால் வீட்டுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது..
யாழ்.மாவட்டத்தில் வீட்டுத்திட்ட பயனாளிகள் தொிவு முழுமையாக இடம்பெறாத நிலையில் சில இடங்களில் வீட்டுத்திடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது.
இந்நிலையில் பயனாளி தொிவே முழுமை பெறாத நிலையில் அடிக்கல் நாட்டுவது எப்படி? என மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றது. மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற வீட்டுத்திட்ட பயனாளிகள்தொிவு நிறைவுபெறவில்லை.
இதற்கிடையில் பொதுமக்கள் சிலருடைய வீடுகளுக்கு செல்லும் சிலர் ஒரு அரசியல் கட்சியின் பெயரை குறிப்பிட்டு அதனுடைய ஆதரவாளர்கள் தாங்கள் என அடையாளப்படுத்தியதுடன் உங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படும்.
என நம்பிக்கையளிப்பதுடன் தங்களுடைய செல்வாக்கில் பயனாளியாக உங்களை தாம் தொிவு செய்துள்ளோம் என மக்களிடம் கூறியதாக மக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
சுப நேரம் பாராது, நாள், திகதி பாராது தமக்கு நேரம் கிடைக்கும்போது வீட்டு திட்டங்களுக்கான அடிக்கல்களை நாட்டுவதும் தமக்கு தர்மசங்கடமாக உள்ளதென மக்கள் கூறியிருக்கின்றனர்.