யாழ்.கோண்டாவில் வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது! மிகுதி 11 பேரை தேடுகிறது பொலிஸ், அடைக்கலம் கொடுத்தால் கடுமையான நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவில் வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது! மிகுதி 11 பேரை தேடுகிறது பொலிஸ், அடைக்கலம் கொடுத்தால் கடுமையான நடவடிக்கை..

யாழ்.கோண்டாவில் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைவெறி வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 3 வாள்கள் மீட்கப்பட்டதாக மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

கோண்டாவில் பகுதியில் கடந்த 30ம் திகதி வீடியோ ஒளிப்பதிவு செய்யும் இடத்திற்குள் புகுந்த இனந்தெரியாத குழுவொன்று அட்டகாசம் புரிந்ததோடு அதில் 8 பேர் வாள்வெட்டுக்கு இலக்கானதுடன், வாகனங்கள் சேதமாக்கப்பட்டு, வீடு தீக்கிரையாக்கப்பட்டது. 

மேலும் இந்த சம்பவத்தில் இளைஞர் ஒருவருடைய கை துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்களின் சாதுரியத்தால் அது பொருத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில், யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் 

தலைமையிலான பொலிஸ் அணி பிரதான சந்தேகநபர் மூவரை கைது செய்துள்ளதோடு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 3 வாள்களையும் மீட்டுள்ளது. மேலும் வன்முறை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், ஆட்டோ ஆகியனவும் மீட்கப்பட்டது. 

சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் 14 பேர் கொண்ட வன்செயல் கும்பல்  5 மோட்டார் சைக்கிளில் சென்று குறித்த சம்பவத்தை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் தெல்லிப்பளை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 

இருவர் பொம்மை வெளி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் யாழ்ப்பாணப் பகுதியை சேர்ந்த ஒன்பது பேரும் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்கள் மிக விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் குறித்த சந்தேக நபர்களை மறைத்து வைத்திருந்து உதவி புரிவோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக

மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் தெரிவித்தார்.

.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு