யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா மரணங்கள்! மேலும் இருவர் கொரோனா தொற்றினால் மரணம்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
இறப்பின் பின் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின்போதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்கும் 44 வயதான ஆண் மற்றும் 56 வயதான பெண் ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழப்பின் பின் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய உடலம் தகனம் செய்யப்படவுள்ளது.