யாழ்.தாவடி தோட்ட வெளியிலிருந்து வாள்கள் மீட்பு! வாள்வெட்டு குழுவை தேடி சென்றபோது..

யாழ்.தாவடி தோட்டவெளியிலிருந்து 4 வாள்களை சுன்னாகம் பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று அதிகாலை இவை மீட்கப்பட்டுள்ளன. மருதனார்மடம் சந்தைக்குப் பின்புறமாக உள்ள வீடொன்றுக்குள்
நேற்றுமுன்தினம் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தோர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களைத் தேடிச் சென்ற போதே வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.