யாழ்.பருத்தித்துறை கணக்கிலாவத்தை சமூக தொற்று உருவாகியிருக்கலாம் என அச்சம்! நேற்றும் இருவருக்கு தொற்று, எழுமாற்று பரிசோதனைக்கு தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை கணக்கிலாவத்தை சமூக தொற்று உருவாகியிருக்கலாம் என அச்சம்! நேற்றும் இருவருக்கு தொற்று, எழுமாற்று பரிசோதனைக்கு தீர்மானம்..

யாழ்.பருத்தித்துறை - தும்பளை கணக்கிலாவத்தை பகுதியில் நேற்றய தினமும் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் குறித்த பகுதியில் சமூக தொற்று உருவாகியிருக்கலாம் என சுகாதார பிரிவினர் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர். 

குறித்த பகுதியில் ஒரு குடும்ப பின்னணியின் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதுடன் ஒருவர் தொற்றினால் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் நேற்றய தினம் இரு பெண்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து குறித்த பகுதியில் சமூகத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அடிப்பயைடில் இன்று எழுமாற்று பரிசோதனையை அப்பகுதியில் முன்னெடுக்க சுகாதாரத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் உயிரிழந்த முதியவருக்கும் 

அவரது குடும்பத்தில் மேலும் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது மரண நிகழ்வில் கலந்து கொண்ட பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு