யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு! நல்லுார் பகுதியை சேர்ந்தவர்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவித்திருக்கின்றன.
இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்திருக்கின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் சுகாதார விதிகளுக்கு அமைய மின் தகனம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, மாவட்டத்தில் இன்று நடத்தப்பட்ட
அன்டிஜன் பரிசோதனைகளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.