சுதந்திர தமிழீழமா? சுயாட்சி தீர்வா? தரபோகிறீர்கள்? சிவாஜிலிங்கள் கேள்வி
முல்லைத்தீவு மாவட்டத்தில் புற்றுநோய்க்கு ஒத்ததாக சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுக் கொண்டிரு க்கிறார்கள். இவ்வாறான சிங்கள குடியேற்றங்களை இந்த அரசாங்கம் மட்டுமல்ல எல்லா அரசாங்க ங்களும் செய்தன, செய்யும். ஆகவே சிங்கள இனவாதிகள் சுதந்திர தமிழீழத்தை தரப்போகிறீர்களா? சுயாட்சி தீர்வை தரப்போகிறீர்களா? என தீர்மானிக்கவேண்டும். என எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண் டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மேற்க ண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழ் மக்களுக்கு சொந்
தமான நிலத்தில் சிங்கள குடியேற்றங்களை இந்த அரசாங்கம் மட்டுமல்ல எல்லா அரசாங்கங்களுமே செய்தன. இனியும் செய்யும். முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைக்கு புற்றுநோய்போல் சிங்கள கு டியேற்றங்கள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் முல்லைத்தீவில் தமிழர்களின் இருப்புக் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் பட்டிப்பளை ஆற்றை கல்லோயா என பெயர்
மாற்றம் செய்து கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்தார்கள். இவ்வாறு காலத்திற்கு காலம் எல்லா அரசாங்கங்களும் தமிழ் மக்களுடைய நிலத்தில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்களை செய்தன. ஆகவே சிங்கள இனவாதிகள் பதிலளிக்கவேண்டும். சுதந்திர தமிழீழத்தை தர ப்போகிறார்களா? அல்லது சுயாட்சி அரசியல் தீர்வினை தரப்போகிறார்களா? என சிவாஜிலிங்கம் மேலும் கூறினார்.