யாழ்.கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் கடன் திட்டத்திற்கு தொிவான பயனாளியை மிரட்டும் சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் கடன் திட்டத்திற்கு தொிவான பயனாளியை மிரட்டும் சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்!

கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஊரெழு மேற்கு கிராம சேவகர் பிரிவில் வீட்டுக்கு வீடு வியாபார நிலையங்களை விஸ்தரிப்போம் எனும் சமுர்த்தி மானிய கடன் பெறுவதற்கு பெயர் தெரிவாகியிருந்த பயனாளி ஒருவரை தனக்கு குறித்த மானிய கடன் திட்டம் வேண்டாம் என்று கடிதம் எழுதி தருமாறு 

குறித்த பிரிவின் சமுர்த்தி உத்தியோகத்தர் கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சமுர்த்தி திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீட்டு வியாபார நிலையங்களை விஸ்தரிப்போம் எனும் மானிய கடன் வழங்கும் திட்டத்திற்கு 

யாழ் மாவட்டத்தில் பயனாளிகளின் பெயர்கள் தெரிவு செய்யப்படுகின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஊரெழு மேற்கு கிராம சேவகர் பிரிவில் சுயதொழில் நோக்காக சிறிய வியாபார நிலையத்தை 

நீண்டகாலமாக வீட்டோடு நடத்தி வருகின்ற குடும்ப பெண் ஒருவர் உரிய தகுதிகளின் அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு முன்னரேயே பயனாளியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த பயனாளியை இன்றைய தினம் பயனாளியின் கணவரை அழைத்த சமுர்த்தி உத்தியோகத்தர் 

மானிய கடன் வேண்டாம் என கடிதம் எழுதி தருமாறு அழுத்தம் கொடுத்துள்ளார். எனினும் அவர் கடிதம் வழங்க மறுப்பு தெரிவித்தபோதும் குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர் தனக்கு மேலதிகரிகளாலும் பிரதேச அரசியல் வாதிகளாலும் கடும் அழுத்தம் வருகின்றது எனத் தெரிவித்ததோடு 

உடனடியாக மனைவியோடு கலந்தாலோசித்து கடன் வேண்டாம் என்ற கடிதத்தை வழங்குமாறு பணித்துள்ளார். எனினும் பயனாளி கடிதம் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு