யாழ்ப்பாணத்தில் இப்படியும் வியாபாரம் நடக்கிறதாம்! நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு தொியுமா?

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் இப்படியும் வியாபாரம் நடக்கிறதாம்! நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு தொியுமா?

யாழ்ப்பாணத்தில் சமையல் எரிவாயு நிறுவனம் ஒன்றின் எரிவாயு சிலிண்டர்கள் 18 லீட்டர் என குறிப்பிடப்பட்டு 100 ரூபாய் விலை குறைப்பு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே குறித்த நிறுவனத்தில் 12.5 கி.லோ எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1,600 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 18 லீட்டர் என குறிப்பிடப்பட்டு 100 ரூபாய் விலை குறைப்பு செய்யப்பட்ட போதிலும் 

முன்னைய சிலிண்டரின் காஸ் கொள்வனவில் இருந்து 4 கிலோ குறைவாகக் காணப்படுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. அரசாங்கம் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க மாட்டோம் என கூறிய நிலையில் 

எரிவாயு நிறுவனங்கள் சூட்சமமான முறையில் இவ்வாறு லீட்டர் என குறிப்பிடப்பட்டு ஏற்கனவே வழங்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களிலும் பார்க்க குறைந்தள கொள்ளளவுடைய சிலிண்டர்களை சந்தையில் விட்டுள்ளதாக 

உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது.100 ரூபாய் விலையை குறைத்து ஏற்கனவே வழங்கப்பட்ட 12.5கிலோ சமையல் எரிவாவை லீட்டர் ஆக்கும்போது 24.5லீட்டர் இருக்கும் ஆனால் தற்போது 18லீட்டர் ஆக்கிய நிலையில் 

9.18கிலோவாக காணப்படுகிறது.100 ரூபாய் விலை குறைப்புக்கு 4கிலோ காஸ் குறைக்கப்பட்ட நிலையில் பழைய 24.5லீட்டர் அல்லது 12.5கிலோ காஸ் உடன் ஒப்பிடுகையில் 300 ரூபாய் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.

யாழ் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்கள் பலவற்றில் நிறுவனங்கள் விற்பனைக்காக இறக்கியுள்ளன.சில வர்த்தகர்கள் குறித்த எரிவாயு கொள்கலன்களை திருப்பி அனுப்பி உள்ள நிலையில் 

தமக்கு 12.5கிலோ கொள்ளளவுடைய சமையல் எரிவாயு வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு