யாழ்.மாவட்டத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றால் மரணம்! பருத்தித்துறையில் வீட்டில் உயிரிழந்தவருக்கும் தொற்று உறுதி..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
இதன்படி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை சுமார் 93 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
மேலும் பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று அதிகாலை வீட்டில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் உயிரிழந்ததை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் உயிரிழந்தவரின் சடலத்தை பீ.சி.ஆர் பரிசோதனை
செய்வதற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பியிருந்தார். அதன் முடிவுகள் வெளியான நிலையில் உயிரிழந்தவருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.