இருநாள் சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு தாதிய சங்கம் அழைப்பு!

வடமாகாண தாதியர்கள் இருநாள் சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு தாதிய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அதாவது தமது ஒன்பது அம்ச கோரிக்கைகள் தொடர்பில் தலைமுறை சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் சுகாதார பணிப்பாளர் அமைச்சருக்கும் தெரியப்படுத்தியும்
சாதகமான நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று வியாழன் மற்றும் நாளை வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்கள் குறித்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தின் போது அவசர சிகிச்சை பிரிவு, விபத்து அவசர சிகிச்சை பிரிவு உயிர் காப்பு அவசர சிகிச்சை பிரிவு ஆகியவற்றில் தாதியர்கள்
தன்னார்வு அடிப்படையில் கடமைகளை ஆற்றுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.