பகுதியளவில் அல்லது முழுமையாக மீள்குடியேற அனுமதிக்கப்படாத பகுதி மக்களுக்கு யாழ்.மாவட்ட செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பகுதியளவில் அல்லது முழுமையாக மீள்குடியேற அனுமதிக்கப்படாத பகுதி மக்களுக்கு யாழ்.மாவட்ட செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு..

2020ம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பில் பெயர் உள்வாங்கப்படாத முழுமையான அல்லது பகுதியளவில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்படாத கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்தவர்கள் தமது கிராம சேவகர்கள் ஊடாக அல்லது தேர்தல் அலுவலகத்திற்கு விண்ணப்பிப்பதன் ஊடாக தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும். 

மேற்படி அறிவித்தலை யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். இது குறித்து மாவட்டச் செயலகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 

தேருநர் இடாப்பு மீளாய்வு – 20212021 ஆம் ஆண்டுக்கான தேருநர்களை கணக்கெடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக வீடுவீடாக பி.சீ படிவங்களை வழங்கி கணக்கெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது.

கடந்த ஆண்டுக்கான தேருநர் இடாப்பில் தேவையான மாற்றங்களை மட்டும் மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.தேருநர் இடாப்பில் யூன் முதலாம் திகதி 18 வயதைப் பூர்த்தி செய்தமை, 

புதிதாக வதிவுக்கு வந்தமை போன்ற காரணங்களால் புதிதாக பெயர்கள் சேர்க்கப்பட வேண்டியவர்கள் அல்லது இறப்பு, வதிவுமாறிச் சென்றமை போன்ற காரணங்களால் பெயர்களை நீக்க வேண்டியவர்கள் வீடுகளில் இருந்தால் 2021.07.22 ஆம் திகதிக்கு முன் 

கிராம அலுவலரை நேரடியாக அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 2021/ER படிவத்தினைப் பெற்று பூரணப்படுத்தி மீள கையளித்தல் வேண்டும்.பிரதேச செயலகங்களிலும்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாகவும் (elections.gov.lk) 

குறித்த படிவத்தினை பெற்று பூரணப்படுத்தி கிராம அலுவலரிடம் சமர்ப்பிக்க முடியும்.2020 ஆம் ஆண்டு தேருநர் இடாப்பில் பெயர் பதியப்படாத முழுமையாக அல்லது பகுதியளவில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் 

தாம் வதியும் கிராம அலுவலரிடம் அல்லது தேர்தல்கள் அலுவலகத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் உரிய கிராம அலுவலர் பிரிவுகளில் தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு