யாழ்.கொக்குவில் மேற்கு வராகி கோவிலை அண்மித்த இரு வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அடாவடி!

யாழ்.கொக்குவில் மேற்கு வராகி கோவிலடி பகுதியில் இன்று மாலை இரு வீடுகளில் வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியிருக்கின்றது.
சுமார் 4 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 9 பேர் கொண்ட வாள்வெட்டு வீட்டின் மீது தாக்குதல் நடத்தியிருப்பதுடன்,
வீட்டிலிருந்த தளபாடங்கள், மற்றும் மோட்டார் சைக்கிள் மீதும் தாக்குதல் நடத்தியதுடன் வீட்டு கதவுகளை வாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.