யாழ்.மாவட்ட பாடசாலைகளில் இணையவழி கற்பித்தலை மேம்படுத்த நடவடிக்கை! 441 பாடசாலைகள் தேர்வு, கல்வி அதிகாரிகளுடன் அங்கஜன் தலமையில் கூட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட பாடசாலைகளில் இணையவழி கற்பித்தலை மேம்படுத்த நடவடிக்கை! 441 பாடசாலைகள் தேர்வு, கல்வி அதிகாரிகளுடன் அங்கஜன் தலமையில் கூட்டம்..

யாழ்.மாவட்டத்தில் 441 பாடசாலைகளில் 4G வலையமைப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் தொிவித்துள்ளார். 

இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலமையில் மாகாண கல்வி அதிகாரிகளுடன்

உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார், இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

தற்போதைய இடர்காலத்தில் மெய்நிகர் இணையவழி கற்ப்பித்தல் இடம்பெற்றுவருகின்றது. ஆனாலும் அனைத்து மாணவர்களாலும் அதனை பெற்றுக்கொள்ள முடியாத 

துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.  இதனை கருத்திற்கொண்டு அரசாங்கம் யாழ்.மாவட்டத்தில் 88 இடங்களில் 

தொலைக்கல்வி நிலையங்களை அமைக்க ஒழுங்கு செய்துள்ளது.  சில இடங்களில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அதற்கு மேலதிகமாக 441 பாடசாலைகளில் ஏற்கனவே இருக்கும் வலையமைப்பு நிறுத்தப்பட்டாலோ, 

அல்லது வலையமைப்பின் திறன்போதாமல் இருந்தாலோ அதனை சீர் செய்வதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து

4G வலையமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான பாடசாலைகள் பிரதேச செயலகங்கள் ஊடாக தமது கோரிக்கையை சமர்ப்பிக்க முடியும்.

என மாவட்ட செயலர் மேலும் தொிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு