எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்.சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக சைக்கிள் பேரணி மற்றும் கவனயீாப்பு போராட்டம்!

ஆசிரியர் - Editor I
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்.சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக சைக்கிள் பேரணி மற்றும் கவனயீாப்பு போராட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்.சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இருந்து கண்டன சைக்கிள் பேரணி இன்று காலை இடம்பெற்றது. 

வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மானிப்பாய் பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் 

இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் 

மற்றும் வலிதென் மேற்கு பிரதேச சபைத் தலைவர் அ.ஜெபநேசன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், 

சாவகச்சேரி முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். 

சண்டிலிப்பாய் பிரதேச செயலக முன்றலில் ஆரம்பித்த இப்பேரணி மானிப்பாய் பிரதேச சபை முன்றலில் நிறைவடைந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு