பூநகரி பிரித்தானியர் கோட்டையில் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம்

கிளிநொச்சி பூநகரி 66 வது படைப்பிரிவினரின் ஏற்ப்பாட்டில் பூநகரி பிரித்தானியர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட கோட்டையில் தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள் தமிழ் சிங்கள மறபுரிமைக்கமைய இன் நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ் சிங்கள புத்தாண்டு முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் சைக்கிள் ஓட்டப் போட்டிகள்இ மரதன் ஓட்டப் போட்டிஇ முட்டியுடைத்தால்இ கயிறு இழுத்தல்இ சறுக்கு மரம்இ தலையணைச் சண்டைஇ அபாயத்தில் நடந்து செல்லல் என பல போட்டிகள் மற்றும் கலைநிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்க விடைம்.
இன்நிகழ்வில் மதகுருமார்கள் கிளிநொச்சி படைமுகாம்களின் கட்டளைத்தளபதிஇ 66 வது படைபிரிவின் கட்டளைத்தளபதி மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.