“அப்பாவை விடுதலை செய்யுங்கள்..” தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் அமைச்சர் நாமலிடம் உருக்கமான வேண்டுகோள்..

ஆசிரியர் - Editor I
“அப்பாவை விடுதலை செய்யுங்கள்..” தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் அமைச்சர் நாமலிடம் உருக்கமான வேண்டுகோள்..

தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுகாதகரனின் விடுதலைக்காக அவருடைய பிள்ளைகள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸவை நோில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். 

யாழ்.வடமராட்சியில் சேதன குப்பைகளை பசளையாள மாற்றும் ஆலை திறப்பு விழாவில் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ கலந்து கொண்டிருந்தார். 

இதன்போதே ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். இந்த சந்திப்பின்போது தமது தந்தையை விடுதலை செய்யுமாறு, 

ஆனந்த சுதாகரின் ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன், மகள் சங்கீதா ஆகியோர் அமைச்சர் நாமலிடம் கோரிக்கை விடுத்தனர்.

சச்சிதானந்தம் ஆனந்த சுதாகர், 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 9 வருடங்களாக மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவருக்கு 9 வருடங்கள் கழித்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இவரின் 36 வயதான மனைவி யோகராணி 

2018 இல் உயிரிழந்திருந்தார். ஆனந்த சுதாகரை மனைவியின் மரணச் சடங்கிற்கு அழைத்து வந்திருந்த போது, அவரின் மகள் சிறைச்சாலை பஸ்ஸில் ஏறிச்செல்ல முயற்சி செய்திருந்தமை 

பார்த்தவர்களின் மனதை நெருட வைத்தது.அதேவேளை அரசியல் கைதிகளின் உறவுகளும் அண்மையில் விடுதலையான அரசியல் கைதிகளும் 

அமைச்சர் நாமலை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு