ராஜபக்ஸக்களை விரட்டுவோம் என கூறிய கூட்டமைப்பு! இன்று விரட்டியபோது..

ஜனாதிபதி தேர்தல் காலத்திலும், தேர்தல் காலத்திற்கு பின்னரும் அரசாங்கம் மீது தீவிர எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்டிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பினர் வடமராட்சி - முள்ளி பகுதியில் சேதன பசளை ஆலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.
அமைச்சர் நாமல் ராஜபக்ஸ கலந்து கொண்டிருந்த குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மேலும் அமைச்சருடன் இணைந்து நாடா வெட்டி ஆலையை திறந்துவைத்தனர்.
தற்போதைய ஆட்சியில் தமிழ் மக்களுக்கு எதிரான பல நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தீவிரமாக எதிர்ப்புக்களை தொிவித்துவந்ததுடன், ராஜபக்ஸக்களை விரட்டுவோம் எனவும் கருத்துக்களை கூறியிருந்த நிலையில் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
நல்லெண்ண அடிப்படையில் கலந்து கொள்வதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் கூறினாலும் சமூக வலைத்தளங்களில் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுப்பபட்டிருக்கின்றது.