யாழ்.நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று இன்றைய தினம் பிசிஆர் மாதிரிகளை வழங்கியுள்ளார். இதன் முடிவுகள் இன்று மாலை வெளியான நிலையில்,
பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவினர் தொிவித்திருக்கின்றனர்.