SuperTopAds

யாழ்.பொலிஸ் நிலைய உத்தியோகஸ்த்தர் விபத்தில் பலி! கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பொலிஸ் நிலைய உத்தியோகஸ்த்தர் விபத்தில் பலி! கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என தகவல்..

கிளிநொச்சி - கரடிப்போக்கு பூநகரி இணைப்பு வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

குறித்த விபத்துச் சம்பவம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விடுமுறைக்கு வீடு சென்று கடமைக்கு திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கரடிபோக்கு சந்தி ஊடாக பூநகரி பரந்தன் வீதிக்கு இணைப்பு வீதி ஒன்றின் ஊடாக பயணித்தபோது விபத்து இடம்பெற்றிருக்கின்றது. விபத்தில் உயிரிழந்தவர் யாழ்.பொலிஸ் நிலைய 

நீதிமன்ற பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய P.S குமாரசிங்க என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

விபத்து இடம்பெற்று சுமார் ஒரு மணிநேரம் சடலம் வாய்க்கால் பகுதியில் காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து வீதியால் பயணித்தவர்கள் பொலிஸாருக்கு 

விபத்து இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் வீதி வளைவு காணப்படும் நிலையில் அதிக வேகம் விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார் 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில் 

அருகில் உள்ள நீர்பாசன வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வேக கட்டுப்பாடை இழந்து குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.