யாழ்.மாவட்டத்திலுள்ள சிறுநீரக நோயாளிகளுக்கு சுகாதார பிரிவினர் விடுத்துள்ள அறிவித்தல்..

யாழ்.மாவட்டத்திலுள்ள நாட்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று இடம்பெறவுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்திருக்கின்றது.
இதன்படி நாட்பட்ட சிறுநீரக நோயாளிகள் யாழ்.போதனா வைத்தியசாலை, ஊர்காவற்றுறை வைத்தியசாலை, தெல்லிப்பழை வைத்தியசாலை, சாவகச்சோி வைத்தியசாலை,
பருத்துறை வைத்தியசாலை ஆகியவற்றுக்குச் சென்று தமக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளலாம் என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.