38 மாகாணசபை உறுப்பினர்களும் முல்லைத்தீவுக்கு பயணம்.

ஆசிரியர் - Editor I
38 மாகாணசபை உறுப்பினர்களும் முல்லைத்தீவுக்கு பயணம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்க ளை கண்டிக்கும் வகையில் வடமாகாணசபையின் 38 உறுப்பினர்களும் எதிர்வரும் 10ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று கவனயீர்ப்பு ஒன்றை செய்வதெ ன வடமாகாணசபையின் 120வது அமர்வில் இன்று தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர் நிலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. 

இன்றைய அமர்வில் மேற்படி சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான உறுதியான தீர்மா னம் எடுக்கவேண்டும் எனவும், வடமாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் முல்i லத்தீவு மாவட்டத்திற்கு சென்று எதிர்ப்பை காட்டவேண்டும் என மாகாணசபை உறு ப்பினர்கள் வலியுறுத்தியிருந்தனர். 

இதற்கமைய எதிர்வரும் 10ம் திகதி மாகாண  முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள், அவை தலைவர் உள்ளிட் ட 38 மாகாணசபை உறுப்பினர்களும் முல்லைத்தீவுக்கு சென்று எல்லை கிராமங்க ளை பார்வையிடுவதுடன் திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு எதிரான கவனயீர்ப்பை செய்வையுதுடன் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை  கையளிப்பதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் அ ழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கான மாகாணசபை உறுப்பினர்கள் விரைவில் வடமாகாணத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசுவதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு