யாழ்.பருத்தித்துறையில் ஒரு கிராமசேவகர் பிரிவை முடக்க பரிந்துரை..! பீ.சி.ஆர் பரிசோதனையில் 20 பேருக்கு தொற்று..
யாழ்.பருத்தித்துறை - கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஒரு கிராமசேவகர் பிரிவை முடக்குவதற்கு மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.
இதன்படி ஜே/350 கிராமசேவகர் பிரிவில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் சுமார் 20 பேர் வரையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இதனையடுத்து சுகாதார பிரிவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் ஒப்புதல் இதுவரையில் கிடைக்கவில்லை எனவும் அனுமதி கிடைத்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். எனவும் சுகாதார பிரிவினர் கூறியிருப்பதாக அறியமுடிகிறது.